அழுகைக் குரல்

ஆள் நடமாட்டம் அதிகம் அல்லாத
அய்யனார் கோயிலில் ஆண்டுமுழுவதும்
அவளின் அழுகை சத்தம்

ஆடிக்கு ஒரு ஆடு
அம்மாவாசைக்கு ஒரு ஆடு
அவளின் அழுகையை தீர்க்குமா?

ஆயினும் அவள் அழுகை
தீரும் என...Read More

       - பிரவீன்

மழலை பருவம்

நாத்திகம் பேசும் நல்லவனும்
நாள் முழுவதும் மகிழும்
மழலை கண்டு
கடவுளே அப்பருவத்திற்கு
அழைத்துச் செல் என்கிறான்

       - பிரவீன்

வாழ்க்கை

நகலெடுக்கும் பெண்ணின்

மருதாணியிட்ட
இடது கை விரல்களுக்கும்...

கருத்த‌
வலது கை விரல்களுக்கும்...

இடையே
பாவித்து வாழ்கிறது வாழ்க்கை!!!

       - பிரகாஷ் சம்பந்தம்

பயணம்

நடந்தவையும் நடக்க வேண்டியவையும்
தன்னை பங்கிட்டுக் கொள்ளும்

கண் எதிரே உள்ள பெண்மணியின்
கண் குறித்து கவிதை எழும்

பலமுறை கேட்ட பாடலின்
அர்த்தம் அம்முறை புரியும்

அடுத்த...Read More

       - பிரவீன்

தனிமை

தனிமையில் தோன்றிய தவறு,

அனைத்தையும் அழித்து
அளித்தது தனிமை

       - பிரவீன்

சாமானியனும் செல்வந்தனும்

நாள்தோறும் முப்பிரிவு மக்களை போல்
உண்ணுபவன் செல்வந்தன்
மாதந்தோறும் முப்பிரிவு மக்களை போல்
உண்ணுபவன் சாமானியன்

       - பிரவீன்

ஒருதலை காதல்

இன்பம் இல்லாமல் மகிழ்வதும்
துன்பம் இல்லாமல் அழுவதுமே!

       - பிரவீன்

மழலை

இன்றும் மழலை தெரிகிறது அவள் முகத்தில்..
அன்று புகைப்படம் எடுத்து வைத்த அவள் தந்தைக்கு அது தெரியாமல் போனது...

       - பிரவீன்

படித்ததில் பிடித்தது

பறவை பார்க்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னை கட்டி போடும்...Read More

       -

அதிராத காலை

மரத்தின் மேல்
ஒரு பட்டாம்பூச்சி எழும்பி,

தவிட்டுக் குருவி
செம்பருத்தியில் சினுங்கி,

பலா மரத்தில்
அணில் ஓடி,

எப்பொழுதும் போல்
முகம் தெரியாத குருவி கத்தி,

காக்கை...Read More

       - பிரகாஷ் சம்பந்தம்

Prev  1  2  3  4  5  6  Next