குரங்கு

நாளை காலை ஒரு முக்கியமான ப்ராஜக்ட் மீட்டிங், இதை வெற்றிகரமாக முடித்தால் போதும், எல்லா கஷ்டங்களும் தீர்ந்துவிடும்.

எப்படியோ போதும் போதும் என்கிற அளவுக்கு ரெடியாயச்சு, இப்பொழுதைக்கு தூங்க வேண்டியது-தான்..

காலையில சீக்கிரம் எழ வேண்டும்.

கட்டாந்தரையில் படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்த படி பல எண்ணங்கள் மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்க, தூக்கம் மட்டும் வரவேயில்லை..

மணி 12.00....

சரி எதாவது படிக்கலாம் என்று சுஜாதாவின் புத்தகத்தை புரட்டினேன்

தலைப்புகளை நோட்டமிட்டபடி புரட்டிக் கொண்டிருந்தேன்.

சுல்தான் நீ எங்கே இருக்கிறாய்?

என்ற சிறுகதையை படிக்க தொடங்கினேன், சிறிது நேரத்தில் கதைக்களம் ஒரு குரங்கை மனிதனாக்கும் முயற்ச்சி என்பது பிடிபட்டது ஆர்வத்தோடு தொடர்ந்து படித்தேன்....

சுல்தான் என்கிற குரங்கின் தலையில் சிறிய பேட்டரியை பொருத்தி, அதை அதீதமாக சிந்திக்க வைக்கவே, அது செய்யும் சேட்டைகளும் அதை தேடி அலையும் இரண்டு கதாபாத்திரங்குளும் கடைசியில் ஒரு அரசியல் கூட்டத்தில் சுல்தான் புகுந்து விடவே, பப்ளிக் நியுசென்ஸ் கேசில் இரண்டு பேரும் ஜெயிலுக்குச் செல்ல நேரிட்டது.


கதையை படித்து முடிக்கையில் மணி 12.45...

சரி இனியாவது தூங்கலாம் என்று புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன்.

சுல்தானும், நாளைய மீட்டிங்கும் இடைவிடாமல் மாறி மாறி வரவே....

தூங்கிவிட்டிருந்தேன்

அலாரச் சத்தம் கேட்டு விழிக்கையில்
மணி 8.30

அச்சச்சோ போச்சுடா, 9.00 மணிக்கெல்லாம் மீட்டிங், அதுவும் இந்த டிராஃபிக்ல எப்படி ரீச் ஆவது.

எப்படியோ அடித்து பிடித்து அலுவலகத்தை சென்றடைகியில் மணி 9.30 ஆகியிருந்தது.

மீட்டிங் அறையில் யாரும் இல்லை, மேனேஜர் அறையை சென்றடைந்து,

கதவைத் தட்டி எக்ஸ் க்யுஸ் மீ சார்...

நோ எக்ஸ் க்யுஸ்..

யு கேன் ரிலிவ் நெள‌. நோ மோர் ஆர்குயுமென்ட்.

ஜஸ்ட் கெட் அவுட்....


சிறிது நேர மெளனத்தின், வெறித்த பார்வையினூடே குரங்கு என்னை பார்த்து கைக்கொட்டி சிரிக்கும் பிம்பம் நிழலாடியது...

வீறிட்டு எழுந்தேன் படுக்கையில் இருந்து...

மணி 8.30


                   - கா.சரவணன்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil