கண்ணீர் பூக்கள் (படித்ததில் பிடித்தது)

எந்த தேவதையாலும் அவன் ஆசீர்வதிக்கப்படவில்லை
ஆனால்
எல்லாச் சாத்தான்களாலும்
இஷ்டம் போலச் சபிக்கப்பட்ருக்கிறான்!

எந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை
ஆனால்
எல்லாப் புயல்களோடும் அவன் போராடியிருக்கிறான்!

மகிழ்ச்சி மலர்களை அவனால் பறிக்க முடியவில்லை
அவன் தோட்டத்தில் மலர்வதெல்லாம்
கண்ணீர் பூக்களாகவே காட்சியளிக்கின்றன!

என்றாலும் அவன் பயணம் பழுதுபடவில்லை
சோகச் சிலுவைகளை நெஞ்சில் சுமந்து கொண்டு
அவன் நடக்கிறான்
அழுகைக்குப் பிறகும் ஓர் அணிவகுப்பு நடத்துகிறான்!

சோதர மானுட வேதனைகளுக்காக - அவனது
கவிப்பயணம் காலசைக்கிறது
துயரச் சுவடுகள் பூமியில் பதிகின்றன!

என் வாழ்க்கை நாடகத்தில்
எத்தனையோ காட்சிகள்
எததனையோ காட்சிகளில்
எழமுடியா வீழ்ச்சிகள்!

மண் வாழ்க்கை மேடையி நான்
மாபெரிய காவியம்
மாபெரிய காவியத்தின்
மனம் சிதைந்த ஓவியம்!


                   - மு.மேத்தா

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil