அதிராத காலை

மரத்தின் மேல்
ஒரு பட்டாம்பூச்சி எழும்பி,

தவிட்டுக் குருவி
செம்பருத்தியில் சினுங்கி,

பலா மரத்தில்
அணில் ஓடி,

எப்பொழுதும் போல்
முகம் தெரியாத குருவி கத்தி,

காக்கை கரைந்து,

வானத்தில்
இரு பறவைகள் எங்கோ செல்ல..

இக்கணத்தில்...

நான் என்னில் இருக்கிறேன்!


                   - பிரகாஷ் சம்பந்தம்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம்
சந்தானம்
அழகான, ஆழமான கவிதை.

வளரட்டும் உங்கள் கவித்துவம்.
Umadevi
Iniya thigattatha kavithai
Karthi Sambandam
அருமை!!
உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil