முதல் வாக்கு

நான் கற்ற முதல் எழுத்து
அமுது மொழியின் அ

நான் கொண்ட முதல் காதல்
கயல்விழியும் தோற்கும்
என் கண்மணியின் கருவிழி

நான் வாங்கிய முதல் சம்பளம்
விரும்பிய வேலைக்கே

இவை யாவும் அழகாய் அமைய
என் முதல் வாக்கு மட்டும்..

அடக்கி ஆளும் கட்சிக்கோ

ஊழல் நிறைந்த கட்சிக்கோ

கணம் பார்த்து களம் மாறும் கட்சிக்கோ

காலடியில் சுற்றி காரியம் சாதித்தவனுக்கோ

தேரடி வீதியில் கொள்ளை அடித்ததை
கொண்டு வருபவனுக்கோ

தலைவனுக்காக சிறை சென்றவனுக்கோ

தலைவா என்று நான் திரையில்
கண்டவனுக்கோ


                   - பிரவீன்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil