கணவு மெய்யானால்..

கணியன் தன் பெற்றோரின் சோகக்கதை கேட்டும் சில உத்வேகம் நிறைந்த தமிழ் படங்கள் பார்த்தும், அட கணேசன் மகன் கணியன் காலி இடத்துல கான்கிரீட் பில்டிங் கட்டிருவான் போலயே என்று பக்கத்து வீட்டுக்காரன் கூறும் அளவிற்கு சுமாரான மதிப்பெண் பெற்றான்.

என்ன படித்தால் கான்கிரீட் கட்டிடங்கள் கட்டலாம் என்று பலரிடம் விசாரித்தான்.அவனை சுற்றி உள்ளவர்களும் வல்லுநர்களாக மாறி பல ஆலோசனைகள் கூறின.

அவனும் ஆலோசனைகள் அடிப்படையில், சற்றும் சிந்திக்காமல் குடுத்த கட்டளைகளை விரைந்து முடிக்கும் கணினி போலவே கணினித் துறைக்கு விரைந்தான்.

கான்கிரீட் கட்டிடத்தை மட்டுமே ஆசையாக கொண்ட அவனுக்கு, கல்லூரி விழாவில் ஒரு நாடகத்தில் நடித்தான். அந்த நடிப்பிற்காக கிடைத்த மரியாதையும் பாராட்டுகளும் கணியனுக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை கணியனுக்கு உணர்த்தியது. நாளடைவில் அதுவே ஆசையாகவும் ஆனது. பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிபடித்தினான்.

நாட்கள் கடக்க, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையும் கிடைக்கிறது. இங்கேயும் சற்றும் சிந்திக்காமல் பல கட்டளைகள் மென்பொருளாக உருவாகுவது போல் கணியனை சுற்றி உள்ள வல்லுநர்களின் ஆலோசனைகள் கணியனை மென்பொருள் தயாரிப்பாளராக மாற்றியது.

கான்கிரீட் கட்டிடங்கள் மேல் உள்ள ஆசையின் காரணமாக கணிப்பொறி முன் நாள்தோறும் அமர்கிறான்.ஆயிரம் மூளைச் சலவை செய்தாலும் அடிமனதில் பதிந்த ஆசை அழியவில்லை. இதற்கிடையில் மேலாளரின் திட்டும், சில நல்ல கதைகளும் தனது ஆசையை அதிகப்படித்தியது. மென்பொருள் மேல் உள்ள வெறுப்பும் அதிகம் ஆகாமலா இருக்கும்?அன்று கணியன் விரக்தியை தவிர்க்க மதுபானம் அருந்தி உறங்கினான்.

அசால்ட் சேது திருச்சியை திருநெல்வேலியாக மாற்றிக்கொண்டிருந்தான்.ரத்த வங்கியில் பணிபுரிபவன் கூட ரத்தம் பார்க்காமல் உறங்குவான் ஆனால் சேது ரத்தம் பார்க்காமல் உறங்குவதில்லை.தன்னை எதிர்ப்பவர்களின் வாயில் அமிலம் ஊற்றி கொடுரமாக கொலை செய்கிறான்.இம்மாதிரியான சம்பவங்கள் சாதிக் கலவரத்தில் சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்தை எரிக்கின்ற சாதரன ரவுடி இல்லை என்று உணர்த்துகிறது.ஒரு நாள் சம்பவத்துக்கு செல்லும் பொழுது ரஜினிகாந்த் அவ்வழியாக வருகிறார். ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பால் அபிஷேகம்,மேல தாளம் என அனைத்தும் ஆடம்பரமாய் நடைபெறுகிறது.

இதை பார்த்த சேதுவுக்கு பேராசை ஏற்படுகிறது.ஒரு அறிமுக இயக்குனரும் சேதுவை வைத்து படம் எடுக்க முடிவு செய்கிறான். பல போரட்டங்களுடன் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்தது. நான்காம் நாள் ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த வேண்டும். அந்த நாள் இறுதி நிமிடம் வரை சேது ஒழுங்காக நடிக்கவில்லை. இயக்குனர் சேதுவின் கண்ணத்தில் பலமாக அறைந்தார்.

சட்டென்று கணியன் விழித்துக்கொண்டான். கணவா என்று கேட்டவாறே அலுவலகத்திற்கு கிளம்பினான்.

அலுவலகத்தில் மேலாளர் முழு கோபத்துடன் காத்திருக்கிறார். மென்பொருள் தோல்வி அடைந்ததுவிட்டது என கணியனின் முகத்தைக் கூட பார்க்காமல் கோபத்துடன் கூறுகிறார். பிறகு சில வாக்குவாதம் ஏற்பட மேலாளர் கோபத்தின் உச்சிக்கு சென்று கணியனின் கண்ணத்தில் பலமாக அறைந்தார்.

அந்த கணம் கணவில் வந்த அசால்ட் சேதுவை நிணைவுற்றான்.அசால்ட் சேதுவை இயக்குனர் அசால்டாக அறைந்ததுற்கு காரணம் தவறாக கேமரா முன் நின்றதே காரணம் என உணர்கிறான்.கணியனும் கணிப்பொறி முன் இருந்த இருக்கையில் இருந்து எழுந்து இயக்குனர் அலுவலகம் முன் நிற்கிறான்.


                   - பிரவீன்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம்
நண்பன்
கற்பனையின் அற்புதம்
Saravanan m
அருமை வாழ்த்துக்கள்
உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil