என்றென்றும் காத்திருக்கிறேன்..!!

எப்போதும்
என்னை
காத்திருப்பதாக
கூறினாயே
உன் வருகை பதிவிற்காக
காத்திருக்கிறேன்..


கால்தடம் தேடி
காலங்கள் ஓடி
இரண்டு வருடம்
கடந்த பின்பும்
காத்திருக்கிறேன்..

ஏதோ மாற்றம்
ஏனோ ஏக்கம்
மறைத்து கொள்ள
நினைக்கும் போதும்
மறவாத பந்தம்
மறையாத சொந்தம்
அதனாலோ என்னவோ
காத்திருக்கிறேன்...

தொப்புள்கொடி தொடர்பாலே
அன்னை வந்தாள்
ஆனால்,
அன்றே
தொடர்கொடி இல்லாமலே
நம் பிணைப்பிற்கு
இதுதானோ காரணமோ
என்றும் இல்லா பிரிவிற்காக
காத்திருக்கிறேன்...

தெரிந்தும் தெரிய
மறுக்கிறது
அறிந்தும் அறிய
மறுக்கிறது
அளவில்லா அன்பிற்காக
காத்திருக்கிறேன்...

உன்னோடு மோட்டார் பைக்கில்
ஊர் சுற்றி
உன்னையே என் ஹீரோவாக்கி
உருகிய நாட்களை
நினைவாடுகிறேன்
பெண்பிள்ளை முன்னே அமர
ஓட்டி செல்லும் நாயகன்களை
பார்த்து உனக்காக
காத்திருக்கிறேன்..

அன்பாக அன்னை இருந்தும்
அன்னையாய் அக்கா இருந்தும்
கடிந்து கண்டித்தாலும்
கண்ணுறங்காமல் காத்திருந்தாயே
ஆயிரம் முறை சண்டையிட்டாலும்
யாருக்காவும்
'என் பொண்ணு 'என்று
விட்டுவிடாமல்
அரவணைக்க நீ இல்லையே
'அப்பா' ..


                   - தன்யா செந

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil