ஒருவன் மனது ஒன்பதடா

ஒருவன் மனது ஒன்பதடா அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)

ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான் (ஒரு)

தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான் (ஒரு)

பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா? (ஒரு)


                   - கண்ணதாசன்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil