சாதரணனின் புதுவருடம் - 2

குடியரசுத் தலைவர் வாழ்த்து மடல்!
பிரதமர் வாழ்த்து மடல்!
முதல்வர் வாழ்த்து மடல்!

எனக்காக...

நான் இவ்வருடமும்
கடன்படத்தான் போகிறேன்...

அவர்களின்
அமாவாசை...Read More

       - பிரகாஷ் சம்பந்தம்

நம்பிக்கை

குனிந்தே இருப்பதை விட
நிமிர்ந்தால்
வானம் தெரியத்தான் செய்கிறது...!

       - பிரகாஷ் சம்பந்தம்

புதுவருட நம்பிக்கை

மூச்சடக்கத்தான் செய்கிறோம்
முத்துக் குளிக்க
மூச்சை நிறுத்த அல்ல

வா புத்தாண்டே...!

       - பிரகாஷ் சம்பந்தம்

சமன் படுதல்

முகம், பெயர் தெரியாத குருவியின்
குரலுக்கு
சாலையோரச் சிறுவனின் எதிர்ப்பாட்டு
நகரத்து இரைச்சலையும்
மன இரைச்சலையும்
ஊடுருவி...!

       - பிரகாஷ் சம்பந்தம்

உங்களுக்கும் இப்படியேதும்...?

மனதின் விஸ்தீரணம்
பெருக்க முடியவில்லை...

தவறா, சரியா?
சரியாகத் தெரியவில்லை...

அப்படியே ஏற்றுக்கொள்ள்
இயலவில்லை...

பேரசைகள் இல்லை...


ஏன்,
பல சமயங்களில்,
ஆசைகளே இல்லை...

வேளைகளும்,...Read More

       - பிரகாஷ் சம்பந்தம்

வெற்றிடம்

சிரித்து முடிக்கையில்........

உன் நினைப்பு!

       - பிரகாஷ் சம்பந்தம்

இக்கரைக்கு அக்கரை பச்சை

அப்பா
எப்போ வருமென்று
அம்மாவிடமும்..

அம்மா
எப்போ வருமென்று
அப்பாவிடமும்

கேட்டு அடம் பிடிக்கும்
குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது!

       - கா சரவணன்

களையெடுத்தல்

கால் சட்டை
இடுப்புல நிக்கல...

நீயெல்லாம்
காசு பார்க்கனும்னு

களையெடுக்க வந்துட்ட

போடா
பள்ளிக் கூடத்துக்கு!

       - கா சரவணன்

உண்மை

பொய் சொல்லியதுண்டா?
உண்டு...

எப்போ?
தேவைப்படும் போது

ஒரு பொய் சொல்லேன்?
நீயொன்றும் அழகில்லை....

ச்சீசீ போடா

உன் வெட்கமும் அழகில்லை...

       - கா சரவணன்

வாழ்க்கை

போட்ட முடிச்சுகளை
அறுப்பதை விட
அவிழ்ப்பது சுகம்
பொருமையோடும்
பெருமையோடும்

       - கா சரவணன்

< Prev  1  2  3  4  5  6  Next