இலக்கு

இது தான்
இப்படி தான்
என்று திட்டமிடுவதற்க்குள்

மறந்திருந்தேன்...

காலமறிந்து பயிரிடவும்
அறுவடை செய்யவும்
தெரிந்திருத்தல்
அவசியம்!

       - சீரமுதன்

இயலாமை

நானே சாக சுடுகாடு தெரியாம சுத்திக்கிட்டு இருக்கேன் என்ட்ட வந்து வழி கேக்கற...

       - பிரகாஷ் சம்பந்தம்

நல்லதோர் வீணைசெய்தே

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது...Read More

       - பாரதியார்

சின்னஞ்சிறுகிளியே

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!...Read More

       - பாரதியார்

உயிர்ப்பும் காலமும்

காலத்துக்கும் உயிர்ப்பு உண்டென்று
காலைகளில் தென்றலாய் - புத்துணர்ச்சியும்
மதியங்களில் உச்சமாய் - வெயிலும்
அந்தியில் நெகிழ்ந்த - வானமும்
அடக்கமான இரவுகளும்.

இயற்க்கையின்...Read More

       - பிரகாஷ் சம்பந்தம்

சாதரணனின் புதுவருடம் - 1

சித்திரபானு, சுபானு
பல பெயர்களுடன் வருடங்கள்
ஒன்று போலவே நாட்கள்...

       - பிரகாஷ் சம்பந்தம்

சாதரணனின் புதுவருடம் - 2

குடியரசுத் தலைவர் வாழ்த்து மடல்!
பிரதமர் வாழ்த்து மடல்!
முதல்வர் வாழ்த்து மடல்!

எனக்காக...

நான் இவ்வருடமும்
கடன்படத்தான் போகிறேன்...

அவர்களின்
அமாவாசை...Read More

       - பிரகாஷ் சம்பந்தம்

நம்பிக்கை

குனிந்தே இருப்பதை விட
நிமிர்ந்தால்
வானம் தெரியத்தான் செய்கிறது...!

       - பிரகாஷ் சம்பந்தம்

புதுவருட நம்பிக்கை

மூச்சடக்கத்தான் செய்கிறோம்
முத்துக் குளிக்க
மூச்சை நிறுத்த அல்ல

வா புத்தாண்டே...!

       - பிரகாஷ் சம்பந்தம்

சமன் படுதல்

முகம், பெயர் தெரியாத குருவியின்
குரலுக்கு
சாலையோரச் சிறுவனின் எதிர்ப்பாட்டு
நகரத்து இரைச்சலையும்
மன இரைச்சலையும்
ஊடுருவி...!

       - பிரகாஷ் சம்பந்தம்

< Prev  1  2  3  4  5  6  7  8  9  Next