ஆசை

நாற்சுவற்றிலிருந்து விடுபட்டு வெளியே
கைவீசி சுற்ற ஆசை

உன் ஆசை என்ன என்ற கேள்விக்கு
பெரிதாக ஒன்றை சொல்ல ஆசை

நண்பர்களுடன் சேர்ந்து
சிறு சிறு தவறுகள் செய்ய ஆசை

பெற்றோரின் பிடியில் இருந்து விலகி
பறவையாய் பறக்க ஆசை

உண்மையான ஆசை என ஒன்றை உணர்ந்து
போராடி அடைய ஆசை

போர்களத்தில் வெற்றியோ தோல்வியோ
மன அமைதியோடு திரும்பிப்பார்க்க ஆசை

அத்தருணத்தில் ஆசைகள் எல்லாம் வருவதை நின்று விட பேராசை


                   - பிரவீன்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil