வறுமை

காக்கையை ஓட்ட
சோளக்கொல்லை பொம்மை
கோட்-சூட்டோடு
பொம்மையை செய்தவன்
கோமணத்தோடு

       - கா சரவணன்

இக்கரைக்கு அக்கரை பச்சை

அப்பா
எப்போ வருமென்று
அம்மாவிடமும்..

அம்மா
எப்போ வருமென்று
அப்பாவிடமும்

கேட்டு அடம் பிடிக்கும்
குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது!

       - கா சரவணன்

களையெடுத்தல்

கால் சட்டை
இடுப்புல நிக்கல...

நீயெல்லாம்
காசு பார்க்கனும்னு

களையெடுக்க வந்துட்ட

போடா
பள்ளிக் கூடத்துக்கு!

       - கா சரவணன்

உண்மை

பொய் சொல்லியதுண்டா?
உண்டு...

எப்போ?
தேவைப்படும் போது

ஒரு பொய் சொல்லேன்?
நீயொன்றும் அழகில்லை....

ச்சீசீ போடா

உன் வெட்கமும் அழகில்லை...

       - கா சரவணன்

வாழ்க்கை

போட்ட முடிச்சுகளை
அறுப்பதை விட
அவிழ்ப்பது சுகம்
பொருமையோடும்
பெருமையோடும்

       - கா சரவணன்

முத்தம்

உணர்வில்லாத
காகித கடிதத்தில்
உனர்வோடு
உன் உதட்டுச்சாயத்தாள்
நீ வரைந்த
ஓவியம்
------------------------------------

இதழ் மீது
இதழ் வைத்து
தேனெடுக்கும்
வண்டுக்கு தெரிந்த தொழில்

       - கா சரவணன்

முரன்பாடு

உண்மையில்
நான் பேச வந்தது
சமாதானம்...

பேசி முடிக்கையில்
முரன்பாடாயிற்று...

       - கா சரவணன்

அதிசயம்

ஈரிதழ் பூவடீ
நீ
என் நாவிதழ்
சுவைக்கும் போதெல்லாம்
தேன் வார்க்குதடீ

       - கா சரவணன்

பயணம்

குருட்டு குதிரையில்
இருட்டு இரவினில்
பழக்கமில்லா பாதையினில்
பயணமிக்கிறேன்

குருட்டு குதிரையும்
என் வழியில்
வரவில்லை

நானும் அதன்
வழியில்
செல்லவில்லை

பயணம்...Read More

       - கா சரவணன்

புரியாத‌ ம‌ர‌ண‌மும் பாச‌மும்

ம‌ர‌ண‌ப் ப‌டுக்கையிலிருந்த‌
தாத்தாவிற்கு

நிறைவேறாத‌ ஆசையிருப்பதாக‌

வாழ்ந்த‌ ம‌ண்ணையும்
அணிந்த‌ பொன்னையும்
இழைத்து ஊட்டினார்க‌ள்

அப்பொழுதும்...Read More

       - கா சரவணன்

Prev  Next