மௌனமும் உடைக்கப்படும் (காத்திருக்கிறேன்)

பேசாத ஓவியம்...
பொல்லாங்கு செய்கிறது
என்றால்...
ஏற்காதா ஏனைய
எண்ணமும்..
பேசதான் செய்திடும்..
அமைதியின் வன்முறையில்
காத்திருக்கிறேன்....
உடைக்கப்படும் மௌனத்திற்காக..!

உடைப்படும் ஒருநாள்
எந்தன் யுத்தமும்..!
விடுபட கூடும்
எந்தன் சத்தமும்..!
முட்டி மோதுகிறது...
அவிழ்த்துவிட நேரமும்..!
அறுதெறிய நானும்..!
காத்திருக்கிறேன் ...
உடைக்கப்படும் மௌனத்திற்காக...!

நேர்புறம் ஒருவிதமும்..
பின்புறம் வேறுவிதமும்..
நம்பிடாத மனமும்..
நம்பிவிடும் விதமும்..
நடிப்பவரிடமும்..!
நகையாடுபவரிடமும்..!
அதை அறியும் காலம்
காத்திருக்கிறேன்..
உடைக்கப்படும் மௌனத்திற்காக...!

தகர்தெறிய தவிக்கிறது
தவமாய் அல்ல..
தவிர்த்துவிட மெல்ல..
தாக தீயை அள்ள..
தரணியை வெல்ல..!!
காத்திருக்கிறேன்..
உடைக்கப்படும் மௌனத்திற்காக...!!

காண்பவரை எல்லாம்
கண்டவராகவே விட்டுவிட்டு..
காரியத்திற்காக பழகிவிட்டு..
கல் நெஞ்சமாய் இருந்துவிட்டு..
போயிருந்தாலும் பரவாயில்லையே!
பாரமாவது மிச்சமாயிருக்கும்..
காசிற்காக கூத்து ஆடுபவர்களுக்கும்..
ஒருவரை காணாமல்
கேலிக்கை செய்து பிழைப்பவர்க்கும்..
வித்தயாசம் உண்டோ..??
அந்த
உணர்வை உணர்த்தவே!
காத்திருக்கிறேன்..
உடைக்கப்படும் மௌனத்திற்காக...!!


                   - தன்யா செந

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil