தனிமை

தனிமையில் தோன்றிய தவறு,

அனைத்தையும் அழித்து
அளித்தது தனிமை

       - பிரவீன்

ஒருதலை காதல்

இன்பம் இல்லாமல் மகிழ்வதும்
துன்பம் இல்லாமல் அழுவதுமே!

       - பிரவீன்

மழலை

இன்றும் மழலை தெரிகிறது அவள் முகத்தில்..
அன்று புகைப்படம் எடுத்து வைத்த அவள் தந்தைக்கு அது தெரியாமல் போனது...

       - பிரவீன்

அழைப்பிதழ்

அழையாத...
அழைப்பிதழ்...

முகநூலில் பார்த்தேன்...

மகிழ்ச்சி...

       - கா.சரவணன்

என் தமிழ் வாழும்!

என் மழலையின்
கண்டுபிடிப்பு...

அப்பா...
"அ" இங்கிருக்கு...

       - சீரமுதன்

வறுமை

காக்கையை ஓட்ட
சோளக்கொல்லை பொம்மை
கோட்-சூட்டோடு
பொம்மையை செய்தவன்
கோமணத்தோடு

       - சரவணன்

Prev  1  Next >