கரும்பு தின்ன கூலியா

நடுத்தர நகரத்தின்
பிரதான இருவழி சாலையின்
ஒரு வழி அடைத்தாகிவிட்டது
கட்சி கூட்டம் நடைபெறும் மேடை மின்விளக்குகளாலும்
கட்சி கொடியினாலும் அலங்காரம் செய்யப்பட்டு
கட்சி தொண்டர்கள் ஆங்காங்கே அமர்ந்தனர்
அரை மணி நேரம் தாமதமாக
அன்றைய பேச்சாளர் தன் உரையை தொடங்கினார்
அவ்வழியே செல்லும் இரு சக்கர வாகனங்கள் அந்த உரையை கேட்டுக்கொண்டே மெதுவாக நகர்ந்தன
ஆளும் கட்சியை பார்த்து கேட்கிறேன்
என உணர்ச்சி பொங்க பேச
பந்தோபஸ்து வந்த காவலர்
தன் தொப்பியை கழற்றி
கையில் வைத்துக் கொண்டு
உரையில் மெய்மறந்து போகிறார்


                   - பிரவீன்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil