வெற்றிடம்

சிரித்து முடிக்கையில்........

உன் நினைப்பு!

       - பிரகாஷ் சம்பந்தம்

இக்கரைக்கு அக்கரை பச்சை

அப்பா
எப்போ வருமென்று
அம்மாவிடமும்..

அம்மா
எப்போ வருமென்று
அப்பாவிடமும்

கேட்டு அடம் பிடிக்கும்
குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது!

       - கா சரவணன்

களையெடுத்தல்

கால் சட்டை
இடுப்புல நிக்கல...

நீயெல்லாம்
காசு பார்க்கனும்னு

களையெடுக்க வந்துட்ட

போடா
பள்ளிக் கூடத்துக்கு!

       - கா சரவணன்

உண்மை

பொய் சொல்லியதுண்டா?
உண்டு...

எப்போ?
தேவைப்படும் போது

ஒரு பொய் சொல்லேன்?
நீயொன்றும் அழகில்லை....

ச்சீசீ போடா

உன் வெட்கமும் அழகில்லை...

       - கா சரவணன்

வாழ்க்கை

போட்ட முடிச்சுகளை
அறுப்பதை விட
அவிழ்ப்பது சுகம்
பொருமையோடும்
பெருமையோடும்

       - கா சரவணன்

முத்தம்

உணர்வில்லாத
காகித கடிதத்தில்
உனர்வோடு
உன் உதட்டுச்சாயத்தாள்
நீ வரைந்த
ஓவியம்
------------------------------------

இதழ் மீது
இதழ் வைத்து
தேனெடுக்கும்
வண்டுக்கு தெரிந்த தொழில்

       - சரவணன்

முரன்பாடு

உண்மையில்
நான் பேச வந்தது
சமாதானம்...

பேசி முடிக்கையில்
முரன்பாடாயிற்று...

       - சரவணன்

படித்ததில் பிடித்தது

பெண்ணின் காதல்...

காலையில் காதலித்தாய்
மாலையில்
எறிந்துவிட்டாய்

இவ்வளவுதானா? உன் காதல்.

இப்படிக்கு
பூக்கள்.

       - வெங்கடேசன்

படித்ததில் பிடித்தது

முதல் காதல் கடிதம்.....
புதிதாய் படிக்கிறேன்..
நூறாவது முறையாய்....

       - வெங்கடேசன்

என் காதலிக்கு

முருகன் கோவிலுக்கு போகாதே பெண்ணே ! மூன்றாவது மனைவியாக்கிவிடுவான் உன்னைக் கண்டால்.....

       - வெங்கடேசன்

< Prev  1  2  3  4  5  6  Next